ரிச்சர்டு மதுரம் - சில நினைவுகள்
காலையிலே ஒரு சோகமான சேதி....
ரிச்சர்டு மதுரத்தின் மரணம் ....
நிழலும் நிஜமும்
ரிச்சர்டு மதுரம் நினைவிருக்கும் என்று நம்புகிறேன்..ஆம் !! காமராஜராக நம் நெஞ்சில் பதிந்தவர்தான் .....
வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் எவ்வாறு சிவாஜியின் நினைவு வருகிறதோ அவ்வாறே இந்த தலைமுறைக்கு காமராஜ் என்றால், நிச்சயமாக மதுரத்தின் நினைவு வரும். அந்த அளவுக்கு நடை, உடை, பாவனைகளில் ஒன்றியிருந்தார்.
சிறு வயதில் அப்பா சொல்ல கேட்டு, ஒருமுறை திருநெல்வெலி கலெக்டர் ஒருவர் ஆளுங்கட்சி பிரமுகருக்கே திரையரங்கு உரிமம் கொடுக்க மறுத்ததை கேள்விபட்ட முதல்வராக இருந்த காமராஜர், கலெக்டர் இல்லம் தேடி வந்து பாரட்டினார், என்பதை கற்பனையில் கொண்ட எனக்கு, எப்பாடு பட்டாவது மதிய உணவு திட்டம் கொண்டுவருவேன் என்றும், தேவைப்பட்டால் நானே ஊர் ஊராக பிச்சையெடுத்தாவது நிதி சேர்க்கிறேன் என்று காட்டிய தீவிரத்தையும் நிஜத்தில் கண் முன்னெ கொண்டு வந்த மதுரத்தின் புகழ் காலத்திற்க்கும் நிலைக்கும் என்பது திண்ணம்.
அவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கும் நல் உள்ளங்களுடன் என் உள்ளமும் சேர்க்கை.....
1 Comments:
Naadu paarthathu undaaa ithu pol naadu paarthathu undaa.. than veedu paarkaamal...naatuukkaka uzhaitha thalaivanai thiraiyil kann mun niruthiya ivarukku en mouna anjali...
seithiyai sonna ungallukku nandri
Post a Comment
<< Home