Monday, September 19, 2005

அன்பே ஆருயிரே --- ஒரு பார்வை

சந்தேகத்தின் காரணமாக பிரியும் காதலர்களை அவர்களின் நினைவே சேர்த்து வைப்பதுதான் கதை.

உண்மையிலேயே தமிழில் வித்தியாசமான கதைக்கரு. ஆனால் இந்த சந்தேகத்திற்க்கான காரணத்தில் வரையறை மீறல்,அந்த காதலர்களின் பிரிவில் வரையறை மீறல், அவர்கள் காதலர்கள் என்பதிலேயே வரையறை மீறல், பின்னர் சேர்வதிலும் வரையறை மீறல் என படம் நெடுகிலும் வரையறை மீறல்கள் ...

"இந்த அசிங்கம் ...என்ன பிடிக்கும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்" என்று கதை நாயகன் மூலம் S.J. சூர்யா சொல்லும் தன்னிலை விளக்கம், தெரிந்தே படத்துக்கு சென்று விட்டு பின்னர் விமர்சனம் செய்யும் என்னை போன்றவர்களை சாடுவதால் இத்தகைய விமர்சனத்திற்கு இத்துடன் ஒரு .

சிவாவும் நிலாவும் காதலர்கள். பத்திரிக்கையாளனான சிவா தன் காதலியுடன் சுக வாழ்வு வாழ அதிகப்படியாக உழைக்க, நிலா தன் காதலன் தன்னோடு அதிக நேரம் செலவழிக்கவும், அவனது கஷ்டத்தை குறைக்கவும் தன் தோழியின் அண்ணனோடு உணவகம் துவங்க, சிவாவின் சக ஊழியன் ஒருவனின் மனைவி உணவகம் துவங்கிய நண்பனோடு ஒடிப்போனதை அறிந்த சிவா நிலாவிடம் வேண்டாமென மறுக்க, பின்னர் நிலாவை சமாதனப்படுத்த அரைமனதோடு சம்மதிக்க , ஆயினும் அதற்கடுத்து நிகழும் சம்பவங்கள் அனைத்தும் சிவாவின் சந்தேகத்தை அதிகப்படுத்த, சந்தேகம் முற்றி சண்டையாகி காதலர்கள் பிரிய இடைவேளை...

அவர்களின் நினைவுகள் நீல நிற உடையில் உருவமெடுத்து, இருவரின் உணர்ச்சிகளையும் கிளறி அவர்கள் இருவரும் இணைவதுதான் மறு பாதி...



இந்த வித்தியாசமான கதை திரைக்கதை ஆக்கப்பட்ட விதத்தை விமர்சித்தால் நான் முன்னரே சொன்னதுப்போல சூர்யாவின் படம் இப்டி இப்டி தான் இருக்கும் என்று தெரிந்தே சென்றுவிட்டு அப்டி அப்டி இருக்கு, எப்டி எப்டி வரைமுறை மீறிவிட்டது என்று விமர்சிப்பது முறையல்ல என்பதால் திரைக்கதை பற்றியும் படமாக்கப்பட்ட விதம் குறித்தும் No comments.

சூர்யா, M.G.R யும் ரஜினியையும் கலந்து கட்ட முயற்சித்திருக்கிறார்... உடலமைப்பும், குரலும் கவுத்தியதால் ஆங்காங்கே காமெடி ஆகிவிட்டது சோகம்

நிலாவும் சிம்ரனாக முயற்சித்திருக்கிறார், இடையமைப்பும், முகபாவமும் கவுத்தியதால்....

சந்தானம் ஆங்காங்கே கலகலப்பூட்டியிருந்தாலும் நகைச்சுவையில் தனித்து நிற்க, நிறைய கவனமும், உழைப்பும், வித்தியாசமான முயற்சியும் தேவை...

இசைப்புயல் மீண்டும் வீசியிருக்கிறது. ஆனால் பாடல்கள் படமெடுக்கும் விதத்தில் ஒருவகையான amateurism தெரிவதால் "மயிலிறகே" கூட வருடவில்லை ....

கனல்கண்ணன் "பன்ச்"சிட்டுரிக்கிறார். ரத்னகுமார் எதிர்பார்த்த படியே சென்சார் அதிகாரிகளுக்கு நிறையவே வேலை வைத்திருக்கிறார். ரஜினியின் வாரிசு கிராபிக்சில் புது முயற்சி எடுத்திருந்தாலும் முன்னரே சொன்னதுபோல ஒருவகையான amateurism தெரிவதால் ஒட்டவில்லை

மொத்தத்தில் ஒவ்வொரு முறையும் தன் திரைக்கதையை நம்பி ஒற்றை வரி கதையை கொண்டு படமெடுக்கும் சூர்யா இந்த முறை திரைக்கதையிலேயே சொதப்பி இருப்பதால்... அன்பேஆருயிரே ஆச்சரியப்படுத்தவில்லை !!!!

1 Comments:

At 6:51 AM, Blogger dondu(#11168674346665545885) said...

அ ஆவைப் பற்றிய என் பதிவிலிருந்து ஒரு பகுதி.
"படத்தின் கருத்து நல்லதுதான் ஆனால் அது தவறான ஆளிடம் சிக்கியதுதான் சோகம். மணிரத்தினம், சுஜாதா, கமல் காம்பினேஷனில் இப்படம் நன்றாக சோபித்திருக்கும். இங்கு குரங்கு கையில் பூமாலையாக ஆயிற்று. படம் முழுக்க ஒரே கூச்சல், பாடல் வரிகள் புரியவே இல்லை. தியேட்டரில் இருந்த விசிலடிச்சான் குஞ்சுகள் நிலைமையை இன்னும் மோசமாக்கினர் என்றுதான் கூற வேண்டும்."
பார்க்க: http://dondu.blogspot.com/2005/09/blog-post_10.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Post a Comment

<< Home