சங்கரராமன் கொலை வழக்கு ...தொக்கி நிற்கும் சில கேள்விகள் ...
(எதிர்பார்த்தபடியே) சங்கரராமன் கொலை வழக்கு வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஒரு வழக்கு ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு மாற்றப்படுவதற்க்கு அந்த மாநிலத்தில் வழக்கு விசாரணை நேர்மையாக இருக்காது என்ற காரணம் நிச்சயம் மாநில அரசுக்கும், ஆள்வோர்க்கும் நல்ல தரச்சான்றாக இருக்க முடியாது. தமிழகத்தில் விசாரணை நேர்மையாக இருக்காது எனக்கருதி வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுவது இது முதல் முறையில்லை என்பதால், தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக விழித்துக்கொள்ளும் என வழக்கம்போல எதிர்பார்க்கலாம்.
தான் வழக்கு தொடர்ந்த ஒருவரே அந்த மாநிலத்தின் முதல்வர் ஆகிவிட்டதால், அந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுவது வேண்டுமென்றால் இந்திய நீதித்துறையின் வேகத்துக்கும்ு, இந்திய ஜனநாயததுக்கும் எடுத்துக்காட்டு என ஒதுக்கினாலும், தன் மீதான் வழக்கில் அந்த மாநில முதல்வர் தனிப்பட்ட விரோதம் காட்டுவதால், வழக்கின் விசாரணை நேர்மையிருக்காது என குற்றம்சாட்டப்பட்டவரே வழ்க்கு தொடர்ந்ததும், அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதும்
வருந்ததக்கது.
குற்றம் சாட்டப்பட்டவரின் கூற்று உண்மையானதா???, அவ்வாறு இல்லாவிடில் தமிழக அரசு தன் தரப்பு நியாயங்களை நீதிமன்றத்தில் எடுத்துக்கூற தவறி விட்டதா?? என பொதுமக்களுக்கு தெரிவிப்பது "தகவலறியும் மசோதா" எனவெல்லாம் பேசப்படும் இக்காலத்தில் கடமை எனவே கருதுகிறேன்
0 Comments:
Post a Comment
<< Home