அனைவருக்கும் போனஸ் ....... அதிரடி ....
அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு, உச்சவரம்பை நீக்கி 10 சதவீதம் போனஸ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையாவது:
விலை மற்றும் கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்படாமல் வணிக ரீதியாக செயல்படுகின்ற ஏனைய பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மத்திய அரசின் போனஸ் உச்சவரம்பு சட்டத்தின் படி 2004-05ம் நிதி ஆண்டுக்கு குறைந்தபட்சம் 8.33 சதவீதம் போனஸ் வழங்கிட எனது அரசு 14ம் தேதி ஆணை பிறப்பித்தது
ஆனால் இந்த பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுகின்ற 23 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் மத்திய அரசின் போனஸ் சட்ட சம்பள உச்சவரம்பான 3500 ரூபாய் என்ற சம்பள அளவை எட்டிவிட்ட காரணத்தால் போனஸ் பெற தகுதியற்றவர்கள் ஆகின்றனர்.
இருந்தாலும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுகின்ற சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் அனைவரும் பயன்பெறுகின்ற வகையில் மேற்குறித்த போனஸ் உச்சவரம்பை தளர்த்தி அவர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீத கருணைத் தொகை வழங்கிட ஆணையிட்டுள்ளேன்.
போனஸ் சட்டத்தின்படி ஒதுக்கக்கூடிய உபரித் தொகை உள்ள உப்பு நிறுவனம், சேமிப்பு கிடங்கு நிறுவனம், போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பாடநூல் கழகம் ஆகியவற்றில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் இவ்வாறே உச்ச வரம்பு விலக்களிப்பட்டு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும்.
இதை தொடர்ந்து தேயிலை,அரசு ரப்பர் கழகம், வனத் தோட்டக் கழகம், போனஸ் சட்டத்தின் கீழ் வராத கூட்டுறவு இணையங்கள் மற்றும் மற்ற கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் அறிக்கையில் விடுபட்டு போன சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு ..
உங்கள் சகோதரி "அனைவருக்கும் போனஸ்" என்ற லட்சியத்தோடுதான் ஆட்சி பொறுப்பை ஏற்றேன் என்பது உங்களுக்கு இன்றளவில் மறந்திருக்கும். இந்த லட்சியத்தை நிறைவேற்றும் பொருட்டே கடந்த நான்கு வருடங்களாக போனஸ் சரிவர வழங்க இயலவில்லை என்பதை இந்த கணத்தில் தெளிவு படுத்த விரும்புகிறேன்.
மேலும் இந்த பட்டியலில் இதுவரை இடம் பெறாத அல்லும் பகலுமாய் உழைத்து அரசு இயந்திரம் துரிதமாக செயல்பட உதவும் அரசு ஊழியர்கள், போராட்டம் செய்யாமல் , கஞ்சித்தொட்டி ஏதும் திறக்காமல், மாநாட்டுக்கு வந்து ஒத்துழைத்த விவசாய நண்பர்கள், நெசவாளத்தோழர்கள், தேர்தலுக்கு சுயமாய் உதவப்போகும் சுய உதவிக்குழு கண்மணிகள் அனைவருக்கும் 8.33 சதவிகிதம் போனசும், 1.33 சதவிகிதம் ஊக்கத்தொகையாகவும், 10 சதவிகிதம் கூடுதல் கவன ஊக்கத்தொகையாகவும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் இந்த பட்டியலிலும் வராத பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலை இல்லாமல் என் ஆட்சியிலும் அவதியுறும் அபாக்கியசாலிகள் , ஏனையோர்க்கும் 8.33 சதவிகிதம் போனசும், 1.33 சதவிகிதம் ஊக்கத்தொகையாகவும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதனால் அரசுக்கு கூடுதலாக 27 கோடியே 36 லட்சத்து 18 ஆயிரம் செலவாகும்.
மேலும் நிதியிருப்பை பொறுத்து எதிர் அணியில் இருக்கும் சில தலைவர்களுக்கும் (???) ஊக்கத்தொகையாக 11.33 சதவிகிதம் போனஸ் வழங்கும் வாய்ப்பு குறித்தும் பரிசிலித்து வருவதை தெரிவித்து கொள்கிறேன்.
0 Comments:
Post a Comment
<< Home