Sunday, July 31, 2005

காதலுக்கு தூது போகும் .....

காதல் ஒரு வகை இன்பம் என்றால், காதலுக்கு தூது போவது அதைவிட இன்பம் ( இதை சொல்ல சொந்த அனுபவம் எதுவும் தேவையில்லை என நினைக்கிறேன்!!!!). ராம பக்தன் அனுமன் முதல் எங்களுர் ரமா பக்தன் முத்துராமன் வரை தூது போய் காதல் கொடி ஏற்றியவர்கள் பலர் உன்டு. அன்னத்தில் தொடங்கி காக்கை, புறா, தோழி, நிலா, .......என வடிவெடுத்து, தபால், தொலைபேசி, இ-மெயில், சாட், SMS என காலத்திற்க்கேற்ப வளர்ந்த காதல் விடு தூது, இன்று வேறு ஒரு பரிமாணத்தில்......

வழக்கம்போல சோம்பலான ஞாயிறு மதியம்...
வழக்கம்போல பிரம்மச்சரிய தனிக்குடித்தனத்தின் ஒரே பொழுதுபோக்கான TV...
வழக்கம்போல channel மாற்றி மாற்றி Remote ஐ தேய்த்து விட்டு SUN Music க்கு வந்தால் .....
வயிற்றெரிச்சலொடு கண்டதுதான் மேற் சொன்ன புதிய பரிமாணம்....

உண்மையிலே ரொம்ப புதிதான நேரப்போக்காக இருந்தது...கொஞ்ச நாளாகவே இதை பார்த்திருக்கேன். ஆனால் இவ்வளவு கவனம் கொடுத்து பார்த்ததில்லை...
I love u da செல்லம்னு பிரகாஷ்ராஜ் ரேஞ்சுக்கு ஆரம்பிச்சு....I miss u da, நான் Bangloreல இருக்கேன்...., ஏன்டா காலையில இருந்து Msge அனுப்பலனு...கண்ணிர்விட்ற வகையாகவும்...தங்கமே!!! மதியம் சாப்பிட்டியாடி...காதலின் உன்னதமான தவிப்பு நிறைந்தவை என வகைவகையாய்....எத்தனை Msg.. எத்தனை வகை.. எத்தனை காதல்...எத்தனை ஜோடி... எத்தனை எத்தனை....(கொஞ்சம் பொறமையோடுதான்....)

காலத்திர்க்கேற்ப தன்னை மாற்றி கொள்ளாத எதுவும் அழிந்து விடும் என்ற அறிவியல் சித்தாந்தத்தை உணர்ந்து தன்னை மேம்படுத்திக் கொள்ளும் இந்த காதலுக்கு என்றும் அழிவில்லை என்பது திண்ணம்...

ஒரே ஒரு நிமிஷம் ................Hey என் பேருக்கு யாருப்பா SMS அனுப்பினது ...????

Wednesday, July 13, 2005

வெற்றி என்ற பட்டாம்பூச்சி ....

நான் மிகவும் விரும்பி படிக்கும் பகுதியான விகடனின் மதன் கேள்வி பதில் பகுதியில் சில வாரங்களுக்கு முன் படித்தது..

கே : விஜய் வரவர திரைப்படங்களில் அழகாக (????) தெரிகிறாரே??

ப : அது வெற்றியும் அமைதியும் தருகிற அழகு

படித்தவுடன் எனக்கு உண்மையிலேயே வெற்றி அழகை கூட்டுமா என்று தோன்றிய சந்தேகம் இந்த வாரம் விகடனின் முதல் பக்கத்தை பார்த்தவுடன் நீங்கிற்று..

திருவாசகம் விழாவில் ரஜினி....

சந்திரமுகியின் வெற்றியொன்றும் ரஜினியின் முதல் வெற்றியல்ல.... பாபாவின் தோல்விக்குபின் கிடைத்த வெற்றி என்பதே பாட்ஷா, படையப்பா வெற்றியை விட ரஜினியிடம் வழக்கத்தைவிட மிக அதிகமான மகிழ்ச்சி, பொது நிகழ்ச்சியில் ஒதுங்கமால் பங்கேற்பது என்று ஏகப்பட்ட மாற்றங்களுக்கு காரணம் என்பது என் அபிப்பிராயம்...

So ....

தோல்வியென்பது எவ்ளோ பெரிய மனிதராக இருந்தாலும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதும் ஓருவருடைய மகிழ்ச்சிக்கு தற்பொதைய வெற்றி மட்டுமல்ல முந்தைய தோல்வியும் காரணமாக அமையும் என்பதும் நான் கற்ற உண்மை.

வெற்றி மட்டுமல்ல தோல்வியும் அழகை கூட்டுமோ ???

Saturday, July 02, 2005

இதனால் சகல மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்...

இதனால் சகல மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ...............

இந்த பதிவில அன்றாட வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை என் பார்வையில் பதிவு செய்ய போகிறேன்.

கொஞ்சம் பொறுங்கள் வித்தியாசமாய் வீபரீதமில்லாமல் வருகிறேன்...